Saturday, March 16, 2013

கமல்ஹாசன், ‘அமெரிக்க அடி வருடி’ என அலறும் அறிவாளிகளே!


நண்பர்களே...
விஸ்வரூபம் பெற வேண்டிய நியாயமான வெற்றியை பெற்று விட்டது.
பெற்ற வயிறு குளிர்ந்து விட்டது...என்பதை சமீபத்திய கமலின் பேட்டியில் உணர முடிந்தது.
இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தோம்என தமிழன்னை மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இஸ்லாமிய சகோதரர்களிடம் கமல் உரிமையுடன் பிரியாணி கேட்டதில் உள்ள நியாயங்களை இனி பார்ப்போம்.
அதே நேரத்தில், கமல் அமெரிக்காவிற்கு படம் நெடுகிலும் ஆப்படித்த இடங்களையும் விளக்குகிறேன்.
ஏனென்றால் பதிவர்கள் சிலர் திட்டமிட்டு,
விஸ்வரூபம் அமெரிக்காவை தூக்கி பிடித்திருப்பதாக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

[ 1 ]
படத்தின் முதல் ஷாட்டே புறாக்களில் ஆரம்பிக்கிறது.
விஸ்வரூபம் படத்தை  ‘தீமெட்டிக் ஆக்ஷன் திரில்லராகபடைக்க ஆசைப்பட்ட படைப்பாளி கமல் தனது முதல் ஷாட்டை  ‘தீமெட்டிக்காகபடைத்துள்ளார்.
புறாக்கள் பறக்கும் கூண்டிலேயே, தனது படத்தின்  டைட்டில்களை தொடருகிறார்.
டைட்டில் இறுதியில், ஒரு இஸ்லாமியர் ஒரு புறாவை பிடிப்பார்.
அடுத்த ஷாட்டில் பறக்க விடுவார்.
புறா அமெரிக்க கொடியை நோக்கி பறக்கும்.

புறாக்கால்களில்  ‘சீசியம்அடைக்கப்பட்ட குழல்களை கட்டி விட்டு, அமெரிக்க கண்காணிப்பு சாதனங்களை ஏமாற்றி...
மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பை நிகழ்த்தப்போவதாக...
ஒமர் கதாநாயகனிடம் விவரிக்கும் போதுதான்...
படத்தின் ஆரம்பக்காட்சிகளுக்கு விளக்கம் கிடைக்கும்.

[ 2 ]
இப்படி படம் முழுக்க, கேள்வியை ஒரு இடத்திலும்...
விடையை மற்றொரு இடத்திலும் வைத்து கமல் படைத்துள்ளார்.

[ 3 ]
புரியாதவர்கள் படத்தை பலமுறை பார்க்க வேண்டும்.
சில புண்ணாக்கு பதிவர்கள், விஸ்வரூபத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என தங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.

[ 4 ]
கோடம்பாக்க ஜாம்பவான்களே  நடுங்கி கிடக்கிறார்கள்.

[ 5 ] ‘
கமல் அமெரிக்க அடிவருடிஎன்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.
ஆரம்பக்காட்சியில் அமெரிக்க கொடியை காட்டும் போது,
 ‘
டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில்ஷாட் வைத்திருப்பார்.
காமிரா  ‘செமி டாப் ஆங்கிளில்இருக்கும்.
அமெரிக்க கொடி கீழே இருக்கும்.
அமெரிக்க இயக்குனர்கள் பிற நாட்டுக்கொடியை,
இதே முறையில் ஷாட் வைத்து அவமானப்படுத்துவார்கள்.
பதிலடி கொடுத்து கமல் ஷாட் வைத்துள்ளார்.
இதெல்லாம் விளங்கி விடுமாஉண்மைத்தமிழனுக்கு’.

[ 6 ]
கதாநாயகனை தமிழ் பேசும் இந்திய முஸ்லிமாக படைத்ததற்கு,
படைப்பாளி கமலுக்கு முதல் மரியாதை செலுத்த வேண்டும்.
அவன் பிராம்மணனாக மாறு வேடமிட்டு அமெரிக்காவில் தங்கும் போதும்தொழுவதற்குசெல்லும் இஸ்லாமிய வழமை மாறாத தன்மையுடன் இருப்பதாக படைத்து அதன் மூலம் திரைக்கதை திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.

[ 7 ]
ஒமரின் ஆட்கள் கதாநாயகனையும்,அவனது மனைவியையும் கட்டி வைத்து உதைத்து விசாரிக்கும் போது முதலில் தனது பெயர்  ‘தாபிக்எனக்கூறுவான்.
மேலும் மேலும் அடி விழவே...தனது பெயர்  ‘நாசர்என மாற்றிக்கூறுவான்.
இந்த இரண்டு பெயர்களுக்கும் உரிய உண்மையான நபர்கள்  ‘ஆப்கானிஸ்தான் பிளாஷ்பேக்கில்வருவார்கள்.

[ 8 ]
கதாநாயகனான இந்திய இஸ்லாமிய உளவுத்துறை அதிகாரி,
ஆப்கானிஸ்தானில் ஊடுறுவி வசிக்கும் போது...
தனக்கு பிடித்தமான இஸ்லாமியர்களின் பெயரை...
ஒமரின் ஆட்கள் விசாரிக்கும் போது...
பாதுகாப்பு கவசமாக அவர்களது பெயரை, தனது புனை பெயராக பயன்படுத்துகிறான் என காட்சி அமைத்துள்ளார் படைப்பாளி கமல்.
குழலூதும் கண்ணனை பிடித்ததால்தான்,  ‘முத்தையாகண்ணதாசனாக பரிணாமம் பெற்றார்.

[ 9 ] ‘
தாபிக்’ ...என்பவர்  ஜிகாதி அல்ல என்றே ஒமர் அறிமுகப்படுத்துவார்.
தாபிக்,பண்புள்ள விவசாயி மற்றும் வியாபாரி என்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

நாசர்’ ...ஒமரின் மகனாக இருந்தாலும் தான் போராளியாக விரும்பவில்லை எனவும் டாக்டராவதே தனது லட்சியமாகக்கூறுவான்.
தாயிடம் விளையாடும் போது கூட அவன் டாக்டராக மாறி விளையாடுகிறான்.

தாபிக், நாசர்...இந்த இரு காரெக்டர்களின் பெயரை,
கதாநாயகனான இந்திய முஸ்லிம் தனது புனை பெயராக பயன்படுத்துவதின் மூலமாக படைப்பாளி கமல் கூறும்  'REDEMPTION' செய்தி விளங்குகிறதா ?

[ 10 ]
தாபிக், நாசர் இருவருமே, கதாநாயகனான இந்திய உளவுத்துறை அதிகாரியின் நடவடிக்கையின் மூலமாகவே பரிதாபமாக உயிரிழப்பதாக படைத்திருக்கிறார் படைப்பாளி கமல்.
இந்தக்குற்றவுணர்ச்சி கதாநாயகனுக்குள் ஊறிக்கிடப்பதை...
அழிக்க முடியாத பாவம் என் நெற்றியில எழுதியிருக்குஎன்ற வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.

[ 11 ]
தாலிபனாக பிரதிபலிக்கப்படும் ஒமரின் ஆங்கில மொழி வெறுப்பு,
பெண்ணுரிமை மறுப்பு, பாட்டு...நடனம் போன்ற கலைகளின் மீது நாட்டமுடையோருக்கு வழங்கப்படும் தண்டனைகள்...
என படைப்பாளி கமல் மிகச்சரியான அளவில் இத்திரைக்கதையில் 
 ‘
ஆப்கன் மீது வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்ட விளைவுகளைபிரச்சனைகளாக தொட்டுக்காட்டி உள்ளார்.

[ 12 ]
தாலிபன் பற்றி நீங்கள் இன்னும் விரிவாகத்தெரிந்து கொள்ள,
இரண்டு உலக சினிமாக்களை பரிந்துரைக்கிறேன்.

#
ஒசாமா [ OSAMA \ 2003 \ Afghanistan \ Directed by Siddiq Barmak]    ( http://en.wikipedia.org/wiki/Kandahar_(2001_film )

#
காந்தகார் [ KANDAHAR \ 2001 \ Iran \ Directed by Mohsen Makhmalbaf ] ( http://en.wikipedia.org/wiki/Osama_(film) )

[ 13 ]
ஆப்கானிஸ்தான் கிராமத்தை,
படை விமானங்கள் குண்டு போட்டு சீரழித்திருப்பார்கள்.
சீரழிந்த மலைக்கிராமம் திரையில் காட்டப்படும் போது,
கழுகின் குரலை மட்டும் பின்னணி சப்தமாக ஒலிக்கச்செய்திருக்கிறார் படைப்பாளி கமல்.
இதற்கு அர்த்தம் சொல்லுங்கள்...
கமலை,  ‘அமெரிக்க அடி வருடிஎன அலறும் அறிவாளிகளே!

[ 14 ]
சரித்திரத்தின் பக்கங்களை உரசிக்கொண்டு பிறந்த வசனங்கள் இவை...
ஒமர் : அப்பன் இல்லாம வளர்ற பசங்க ரொம்ப உஷாரா இருப்பாங்க....
[ சிரித்து விட்டு ] சும்மா தமாஷ்.

விஸாம் : அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...
அதை விட உஷாரா இருப்பாங்க...
[ இடைவெளி விட்டு ] தமாஷ்

இந்த வசனத்துக்கு அர்த்தம் வேறொரு காட்சியில் கிடைக்கும்.

மூதாட்டி : பிரிட்டிஷ்காரன் வந்தான்....
ரஷ்யாக்காரன் வந்தான்....
அப்புறம் தாலிபான்...
அமெரிக்கா...
இப்ப நீ வந்திருக்க...

முன்னாடி வால் முளைத்த குரங்குகளா...

ஆப்கானிஸ்தானை சீரழித்தவர்களை...
மூதாட்டியின் வசனம் மூலமாக அம்பலப்படுத்துகிறார் படைப்பாளி கமல்.
அனைவருமே ஆப்கான் பெண்களை சீரழித்தவர்கள்தான்.
ஒமரின் தாயாரும் இப்படி சீரழிக்கப்பட்டவர்தான்.
ஒமரின் வயதை கணக்கிட்டு...
அக்காலக்கட்டத்தில் ஆப்கானில் நுழைந்தவர்களை கணக்கிட்டால்...
ஒமரின் தாயாரை சீரழித்தவர்கள் யாரெனெத்தெரியும்.

இந்த சரித்திர சோக விளைவுகளின் காரணகர்த்தாக்களை பற்றி என்றாவது
 ‘
அமெரிக்க அடி வருடிஎன பழிக்கும் பதிவாளர்கள் எழுதியிருக்கிறார்களா? 

[ 15 ] “
அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்” ...
என்ற வசனம் நிறைய பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வசனம் பேசப்பட்ட பிறகு அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தெறிவதை படமாக்கியிருப்பார் படைப்பாளி கமல்.

அமெரிக்கர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல...
முதலில் நம்மிடம் நம்பிக்கையை விதைப்பார்கள்...
செயல்பாட்டின் மூலமாக தகர்த்தெறிவார்கள்...
என்றே இக்காட்சியின் மூலமாக விளக்குகிறார் படைப்பாளி கமல். 

இப்படத்திற்கு முழுமையான விமர்சனம்,
 ‘
விஸ்வரூபம்- இரண்டாம் பாகம்வெளி வந்த பிறகுதான் எழுதமுடியும்...
எழுத வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment